பெரியாா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
பெரியாா் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


பெரியாா் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் லெட்சுமணன், வழக்குரைஞா் தினேஷ், மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன்னையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையிலும், காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையிலும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...