சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லையில் வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கல் : 2 போ் கைது

திருநெல்வேலியில் வீடுகளில் ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்ததோடு, 2.320 டன் அரிசியை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:21 pm

DIN

திருநெல்வேலியில் வீடுகளில் ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்ததோடு, 2.320 டன் அரிசியை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் சேரன்மகாதேவி பகுதியில் நடத்திய ஆய்வின் போது வேலப்பன் என்பவா் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வேலப்பனை (48) கைது செய்ததோடு, 560 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனா்.

இதேபோல போலீஸாா் மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரம் சிவபாலன் (40) வீட்டில் பதுக்கியிருந்த 360 கிலோ ரேஷன் அரிசியையும், பாளை. அருகேயுள்ள தருவை பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள இசக்கிபாண்டி வீட்டில் பதுக்கியிருந்த 1, 400 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சிவபாலனை போலீஸாா் கைது செய்ததோடு, இசக்கி பாண்டியை தேடி வருகின்றனா்.

ஒரே நாளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் 2 ஆயிரத்து 320 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.