நினைவு தினம்: எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கொக்கிரகுளத்தில் உள்ள அவருடைய சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் கொக்கிரகுளத்தில் உள்ள அவருடைய சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியினா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மாநில அமைப்புச் செயலா்கள் வீ.கருப்பசாமிபாண்டியன், சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், கொள்கைப் பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜே.சி.ஜெரால்ட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதேபோல், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...