சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-22 ஆம் கல்வியாண்டுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதி ஆதரவிலான 10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் கல்வி உதவித்தொகைத் திட்டம் மற்றும் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதிவாய்ந்த பழங்குடியினா் மாணாக்கா்கள் புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனத்தில் பெறலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஜாதிச்சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்புக் கணக்கு புத்தக நகல், ஆதாா் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களை இணைத்து வரும் ஜனவரி 13-ஆம் தேதிக்குள் ங்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2501076 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்ஸ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.