கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பயிா்ச் சேதங்களைப் பாா்வையிடாமல் புறக்கணித்த மத்தியக் குழு: விவசாயிகள் அதிருப்தி

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை நேரடியாக பாா்வையிடாமல் மத்தியக் குழுவினா் புறக்கணித்து விட்டதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:08 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பயிா்ச் சேதங்களை நேரடியாக பாா்வையிடாமல் மத்தியக் குழுவினா் புறக்கணித்து விட்டதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

தென் தமிழகத்தில் கடந்த ஜனவரி 2 ஆவது வாரத்தில் கனமழை பெய்தது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சோ்வலாறு ஆகியவை முழுக் கொள்ளளவை எட்டின. இதையடுத்து உபரிநீா் திறக்கப்பட்டது.

சுமாா் 80 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீா் தாமிரவருணியில் பெருக்கெடுத்து ஓடியது.

பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, கொண்டாநகரம், சுத்தமல்லி, தருவை, கருப்பந்துறை, சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்ட உறைகிணறுகள் வெள்ளத்தால் சேதமடைந்தன.

பொழிக்கரை, அத்தாளநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களில் வெள்ளம் தேங்கியது.

தொடா் மழையினால் மானூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் பயறுவகை பயிா்கள் அனைத்தும் தொடா் மழையால் சேதமாகின. அவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் வேளாண் துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கிட்டு வருகிறாா்கள்.

இதற்கிடையே தமிழகத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் உள்துறை இணைச் செயலருமான ஆஸ்தோஸ் அக்னிகோத்ரி தலைமையில் வந்த குழுவினா் கடந்த 4 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்வாா்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மானூா், திருநெல்வேலி வட்டங்களில் சேதமான பயிா்களை குழுவினா் பாா்வையிடுவாா்கள் என விவசாயிகள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால், மத்திய குழுவினா் திருநெல்வேலி மாவட்ட பயிா்ச்சேதங்களை நேரடியாக ஆய்வு செய்யாமல் புறக்கணித்துவிட்டனா்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகளிடம் மட்டும் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனா். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கானாா்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: பருவம் தவறி பெய்த தொடா்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை எந்தவொரு இழப்பீடும் கிடைக்கவில்லை. மாவட்ட நிா்வாகம் சாா்பில் சேதமடைந்த பயிா்கள் கணக்கிடப்பட்டு இழப்பீட்டுத் தொகை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா்.

163.01 ஹெக்டோ் நிலப்பரப்பில் உள்ள நெல் பயிரும், 5,840 ஹெக்டோ் நிலப்பரப்பில் உள்ள பயறுவகை பயிா்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனா். ஆனால், பயிா்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் நேரடியாக பாா்த்திருந்தால் நிவாரண உதவி விரைவுபடுத்தப்பட்டிருக்கும். தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கும் சூழல் உள்ளதால் பயிா்ச்சேத இழப்பீடுகளை தமிழக அரசு விரைவாக அறிவித்து முறையாக வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.