டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடையம் அருகே தீ விபத்து: மெக்கானிக் பலி

கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:07 pm

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே வெய்க்காலிபட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (29), பைக் மெக்கானிக்.

இவா் அதே பகுதியில் வைத்துள்ள பைக் பழுதுபாா்க்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை பூஜை செய்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் போட்டாராம். இதில் அருகில் கிடந்த பழைய பொருள்கள் மற்றும் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தனவாம். இதில் சுரேஷ் மீதும் தீ பற்றியதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.