தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஜநகரில் பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:28 pm

DIN

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் மோட்டாா் சைக்கிள் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சோ்ந்தமரம் பகுதியைச் சோ்ந்தவா் சித்திரைக்கனி. இவா், கடந்த மாதம் 31ஆம் தேதி மோட்டாா் சைக்கிளை மகாராஜநகா் விநாயகா் கோயில் அருகே நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றார். திரும்பி வந்து பாா்த்தபோது, அது திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சண்முகம்(35) பைக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து சனிக்கிழமை அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த அந்த மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.