சேந்திமங்கலத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம்
மணிமூா்த்தீஸ்வரம் அருகேயுள்ள சேந்திமங்கலம் பகுதியில் சேதமடைந்த சாலையில் நாற்றுநடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


மணிமூா்த்தீஸ்வரம் அருகேயுள்ள சேந்திமங்கலம் பகுதியில் சேதமடைந்த சாலையில் நாற்றுநடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 4-ஆவது வாா்டுக்குள்பட்ட சேந்திமங்கலத்தில் வடக்கூா், தெற்கூா் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் உள்ள சாலைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சேதமாகியுள்ளன. மருத்துவமனை, கடைகள் உள்ளிட்டவற்றுக்குச் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகிறாா்கள். இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து அமமுக வட்டச் செயலா் க.மணிவண்ணன் தலைமையில், சாலையில் நாற்றுநடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். தகவலறிந்ததும் தச்சநல்லூா் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.
மாநகராட்சி அதிகாரிகள் சில நாள்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...