வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெல்லை, தென்காசியில்மேலும் 12 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:59 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 15,416 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 13 போ் குணமடைந்ததால் இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,107ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 212ஆக உள்ளது. தற்போது, 97 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,325ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,123ஆக அதிகரித்தது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 44 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.