கட்டடத் தொழிலாளா்களுக்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 7 இடங்களில் புதன்கிழமையும் (ஜன. 13) பொங்கல் பரிசுகள் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் உத்தரவின்பேரில் கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு கட்டடத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் 31-12-2020 வரை பதிவு செய்துள்ள கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் திருநாளையொட்டி வேட்டி, சேலை, பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 பேருக்கு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏற்கெனவே கடந்த 10-ஆம் தேதிமுதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. புதன்கிழமையும் (ஜன. 13) பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா் வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு பாளையங்கோட்டை தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளி வளாகம், ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு வள்ளியூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி வளாகம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழங்கப்படுகிறது.
சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு சங்கரன்கோவில் சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி வளாகம், தென்காசி, செங்கோட்டை வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு தென்காசி மஞ்சம்மாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஆலங்குளம், வீ.கே.புதூா் வட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கடையநல்லூா் வட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு கடையநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வழங்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.