இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கைலாசபுரத்தில் கடைகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ்

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:16 am

DIN

திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்யக் கோரி நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அளித்தனா்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன்பின்பு இணைப்புச் சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கைலாசபுரத்தில் சாலையோரம் உள்ள 20 கடைகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்களிடம் நோட்டீஸ் வழங்க சென்றனா். அதனை பெற மறுத்தவா்களின் கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.