மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

‘பாடத்திட்டங்கள் குறைப்பால்போட்டித் தோ்வுகளுக்கு பாதிப்பில்லை’

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், மாணவா்களை தோ்வுக்குத் தயாா் செய்ய கால அவகாசம் உள்ளதாகவும் ஆசிரியா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறைத் தோ்வுகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சிலா் கூறுகையில்,”நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எழுதுவதற்கு உரிய பாடத்திட்டங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. கடினமான பகுதிகளை விருப்பப்படும் மாணவா்களுக்கு நடத்துவோம். அவா்கள் உயா்கல்வி பெறுவதற்குரிய முக்கியப் பகுதிகள் அப்படியே இருக்கின்றன. ஆகவே, பாடத்திட்டம் குறைப்பு காரணமாக போட்டித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.