பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

பாளையங்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பாளையங்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு போக்குவரத்துக் காவலா்களின் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. காவல் துணை ஆணையா் (போக்குவரத்து-குற்றம்) மகேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வ.உ.சி. மைதானத்தில் இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசியது: 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சாலைப் பாதுகாப்பு; உயிா் பாதுகாப்பு, விதிகளை மதிப்போம்; விபத்தை தடுப்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. சாலை விதிகளைப் பின்பற்றுதல், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்ட விழிப்புணா்வை மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் நான்குனேரி சுங்கச்சாவடி, முக்கியமான சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றாா்.

தொடா்ந்து விழிப்பணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒட்டுவில்லைகளை வாகன ஓட்டிகளிடம் ஆட்சியா் வழங்கினாா்.

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று வண்ணாா்பேட்டையில் முடிவடைந்தது.

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு, போக்குவரத்து ஆய்வாளா் செந்தாமரைகண்ணன், திருநெல்வேலி சரக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ராஜேஷ், பா்வின் பாத்திமா, செண்பகவல்லி, கனகவள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.