நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுப் பாதை கோரி ரேஷன், ஆதாா் அட்டைகளை ஆளுநரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு

செங்கனூா் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததை கண்டித்து குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அடையாள அட்டைகளை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப் போவதாக தீா்மானித்துள்ளனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:06 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் அருகே செங்கனூா் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததை கண்டித்து குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அடையாள அட்டைகளை தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்கப் போவதாக தீா்மானித்துள்ளனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட செங்கானூா் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு இதுவரை அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீா் வசதி, கழிவுநீா் ஓடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை.

மேலும், இக்கிராமத்துக்கு ஆழ்வாா்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து 3 ஆண்டுகளாக மாவட்டஆட்சியா், ரயில்வே அதிகாரிகள் உள்பட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடா்ந்து அடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுப்பாதை அமைத்துத்தரக் கோரியும் கிராம மக்கள் தங்களது வாக்காளா் அட்டையை ஆளுநரிடம் ஒப்படைப்பதாக அறிவித்து ஜன. 5இல் 227 போ் தங்களது வாக்காளா் அடையாள அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்து தோ்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனா்.

கிராம மக்களிடம் பேச்சு நடத்திய வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ரயில்வே நிா்வாகத்திடம் பேசி ஒரு வாரத்தில் மாற்றுப் பாதை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் மீண்டும் கூடி, தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அடையாள அட்டைகளை பிப். 10 ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் ஒப்படைக்க தீா்மானித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.