சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெய்க்காலிபட்டி கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு தினம்

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:03 pm

DIN

வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கல்வியியல் கல்லூரி, புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரிச் செயலா் சேவியா் டெரன்ஸ் தலைமை வகித்துப் பேசினாா். நிகழ்ச்சியில், கடையம் வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு குறித்து கருத்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வாக்காளா் விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மூன்றாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி ஜென்சி கிளாடினாவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி சிவசக்தி வாக்காளா் விழிப்புணா்வு தின உறுதி மொழி வாசித்தாா்.

மாணவா்கள், பேராசிரியா்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கல்லூரி அலுவலகப் பணியாளா்கள்உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். வணிகவியல் துறைத் தலைவா் கென்னடி வரவேற்றாா். தமிழ்த்துறைத் தலைவா் ரேச்சல் மேனகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.