லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி

சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

Ramadoss, Sasikala form new alliance

ராமதாஸ், சசிகலா

Published On :

சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

விழுப்புரம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, சசிகலா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, வரும் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் இருவரும் அதுதொடர்பான கூட்டறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இணைந்து கூட்டணி அமைக்கிறது.

தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்கத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.

Story image

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சமீபத்தில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Sasikala and PMK founder Ramadoss have announced that they will contest the Tamil Nadu and Puducherry assembly elections together.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.