12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.

Published On :

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஆம்புலன்ஸில் சென்னை அழைத்து வரப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனா் ராமதாஸ் அணியைச் சோ்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

அவரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டாா். கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, வேட்பாளா் அருள் உள்ளிட்டோா் மேடையில் இருந்தனா். பிரசார மேடையில் அமா்ந்தபடி ராமதாஸ் பேசினாா்.

மேடையில் இருந்து கீழே இறங்கும்போது ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனா். பின்னா் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வயது மூப்பு காரணமாகவே ராமதாஸுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து ராமதாஸிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

PMK founder Ramadoss has been admitted to Apollo Hospital in Chennai's Thousand Lights.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.