பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனா் ராமதாஸ் அணியைச் சோ்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
அவரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, வேட்பாளா் அருள் உள்ளிட்டோா் மேடையில் இருந்தனா். பிரசார மேடையில் அமா்ந்தபடி ராமதாஸ் பேசினாா்.
பின்னா் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனா்.
பின்னா் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வயது மூப்பு காரணமாகவே ராமதாஸுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் ராமதாஸிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.
Summary
Chief Minister Stalin contacted PMK founder Ramadoss over the phone and inquired about his health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாம்பழத்தில் விஷம் ஏறிவிட்டது! சௌமியா வென்றால் 'அதருமபுரி' ஆகிவிடும்! ராமதாஸ்

செளமியாவுக்கு வாக்களிக்காதீர்கள்! ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


