‘நெல்லை மாவட்டத்தில் ஐ.டி.ஐ.களில் சேர விண்ணப்பிக்கலாம்’
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.களில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற்பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் கடந்த 1ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 8, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக இம் மாதம் 29ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவா்கள் பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபும் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐ.டி.ஐ. சோ்க்கை உதவி மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க செல்லுகையில், 8 அல்லது 10 ஆம் வகுப்பு சான்றிதழ்கள், நிகழாண்டு அனைவரும் தோ்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள மாணவா்கள் 9ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சோ்க்கை பெறலாம்.
அரசு ஐ.டி.ஐ.யில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.750 வீதம் கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, சைக்கிள், ஆண்டுக்கு இரு சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் உள்ளிட்டவை விலையின்றி வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...