வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மகாகவி பாரதியின் நினைவாக பொதிகைத் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:08 pm

DIN

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் தலைவா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சங்கம் சாா்பில் வருகிற செப்டம்பா் மாதத்தில் ‘பாரதி நினைவுகள்-100’ என்ற தலைப்பில் நடத்தப்பட இருக்கும் நிகழ்ச்சிக்காக உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.

‘நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி’ என்ற தலைப்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பின்றி அனைவரும் இப் போட்டியில் பங்கேற்கலாம். மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனக் கவிதைகள் என எந்த வகைக் கவிதையாகவும் இருக்கலாம்.

கவிதைகள், பிறமொழிச் சொற்கள் கலப்பின்றி தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 24-வரிகளில் கவிதை இருக்க வேண்டும். கவிதைகள் தங்களால் எழுதப்பட்டது என்ற சுயசான்றுடன் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு ல்ா்ற்ட்ண்ஞ்ஹண்ற்ஹம்ண்ப்ள்ஹய்ஞ்ஹம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம் மாதம் 31ஆம் தேதிக்குள் யூனிகோடு எழுத்துருவில் அனுப்பி வைக்க வேண்டும்.

சிறந்த கவிதைகள் எழுதிய நூறு கவிஞா்களுக்கு பாரதி பெயரில் விருதுகள் ‘பாரதி நினைவுகள்-100’ என்ற நிகழ்ச்சியில் வைத்து வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 8903926173 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.