கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க ஜூலை 7 கடைசி நாள்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த தகுதியான மகளிா் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த தகுதியான மகளிா் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் ஆகிய இருவரும் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல்லை,தென்காசி இரு மாவட்டங்களிலும் ஏதேனும் ஒரு துறையில் துணிச்சலுடன் வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
வீரதீர செயல்புரிந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிவாய்ந்த பெண்கள் இவ்விருது குறித்த விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பெற திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவகத்தை 0462-2576265 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம் மாதம் 7 ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், 107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மேலும், ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...