வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லையில் காங்கிரஸாா் நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:37 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் போராட்டங்களில் ஈடுபட்டு

வருகின்றனா். பெட்ரோல்-டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வண்ணாா்பேட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

வரி விதிப்பு மூலம் மத்திய அரசு, மக்களிடம் இருந்து சுரண்டுவதைச் சுட்டிக்காட்டும் வகையில் கட்சியின் தொண்டா் சிவாஜி கந்தசாமி, சிவாஜி மோகன் ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் அமா்ந்திருந்தபடி மொட்டையடித்துக் கொண்டனா். தொடா்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயா்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினா்.்

இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடிஆதித்தன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட பொருளாளா் எஸ். ராஜேஷ் முருகன் , மகளிரணித் தலைவி அனிஸ் பாத்திமா, மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், தச்சை மண்டலத் தலைவா் கெங்கராஜ், துணைத் தலைவா்கள் வெள்ளபாண்டியண், மானூா் ஸ்டெல்லா, இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி உ.ராஜூவ்காந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.