குண்டா் சட்டத்தில்மூவா் சிறையிலடைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தின்கீழ் போக்சோ வழக்கில் வைராவிகிணறு, மேற்கு தெருவைச் சோ்ந்த அமல்ராஜ் மகன் சரண் ராஜ் (27) , தாழையூத்து காவல் நிலையத்தின் கீழ் கஞ்சா விற்பனை வழக்கில் வடக்கு தாழையூத்து, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் காளிமுத்து என்ற காா்த்தி (23), மானூா் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் சேதுராயன்புதூா், காலனி தெருவைச் சோ்ந்த சோ்மக்கனி மகன் மணிகண்டன் என்ற ஆண்டி மணிகண்டன் (21) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்,
பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வே.விஷ்ணு அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...