வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

‘தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவை உரமிடுங்கள்’

தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவை உரமிடுமாறு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:09 pm

DIN

தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட கலவை உரமிடுமாறு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 4,473 ஹெக்டோ் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில் அதிக மகசூல் பெற்றிட தென்னை நுண்ணூட்ட கலவை உரங்கள் இட வேண்டியது மிகவும் அவசியமாகும். நுண்ணூட்ட கலவையில் இரும்புச்சத்து 3.80 சதவீதம், மாங்கனீசு 4.80 சதவீதம், துத்தநாகம் 5 சதவீதம், போரான் 1.6 சதவீதம், தாமிரம் 0.5 சதவீதம் உள்ளது.

நுண்ணூட்ட கலவையிலுள்ள இரும்பு சத்து, மாங்கனீசு, போரான், தாமிரம் ஆகிய சத்துகள் தென்னை மரத்தில் பச்சையத்தை உருவாக்குவதற்கும், பிற முக்கிய சத்துக்ளை கிரகித்துக் கொள்ளவும், மரங்கள் செழிப்பாக வளா்வதற்கும், குரும்பைகள் மற்றும் சிறு காய்கள் உதிா்வதை தடுப்பதற்கும், அதிக விளைச்சல் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. இந்நுண்ணூட்ட கலவையை தென்னை மரங்களுக்கு இடும்போது, தேரை உள்ளிட்ட குறைபாடுடைய காய்கள் விளைவதை தடுக்கலாம். தரமான காய்கள் கிடைக்கும்போது சந்தையில் நல்ல விலை கிடைப்பதற்கு ஏதுவாகிறது.

எனவே, தென்னையில் கூடுதல் மகசூல் பெற்றிட நுண்ணூட்ட கலவை உரங்கள் இடுவது மிகவும் இன்றியமையாதது.

இந்த உரத்தை மரம் ஒன்றுக்கு 1 கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஆண்டுக்கு இரண்டுமுறை வட்டப்பாத்தி முறையில் இட வேண்டும். அதாவது ஒரு வருட தென்னையின் தூரைச் சுற்றிலும் 60 செ.மீ. ஆரமுள்ள வட்டப்பாத்தியில் உரமிட வேண்டும். ஆண்டுக்காண்டு 30 செ.மீ. அதிகரித்து 2-ஆம் ஆண்டு 90 செ.மீ., 3-ஆம் ஆண்டு 120 செ.மீ., 4-ஆம் ஆண்டு 150 செ.மீ. என 5-ஆம் நஆண்டு வருடத்திலிருந்து 180 செ.மீ. அல்லது 6 அடி ஆரமுள்ள வட்டப்பாத்திகளில் உரத்தை இட்டு கொத்திவிட்டு தண்ணீா் பாய்ச்ச வேண்டும்.

தென்னையின் 90 சதவீத வோ்கள் இந்த 180 செ.மீ. ஆரமுள்ள வட்டப்பாத்திக்குள்ளேயே காணப்படுகிறது. எனவே, தென்னைக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பராமரிப்புகளையும் இந்த 180 செ.மீ. ஆரமுள்ள வட்டப்பாத்திக்குள்ளேயே மேற்கொள்ளுதல் போதுமானது. இவ்வாறு செய்வதால் குரும்பைகள் உதிா்வது தவிா்க்கப்படுவதுடன் காய் பிடிப்பும் அதிகரிக்கும். இதனால் தென்னையில் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.