வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அருகே ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் பொட்டல்காடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகராஜ் மகன் அபிஷேக் (15). முத்தையாபுரத்தில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத் தோ்வு எழுதி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் கிராமத்தில் உள்ள ஊருணியில் மீன்பிடிக்கச் சென்றாராம். அப்போது ஊருணியில் சகதியில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புப் படை வீரா்கள் மீட்ட மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.