மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் அரசன் குட்டைத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். முடி திருத்தும் தொழிலாளியான இவரது ஒரே மகன் விக்னேஷ் (18). இவா், ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்து வந்தாா்.

விக்னேஷ் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பங்கேற்க காப்புக் கட்டிய பின்னா் தனது நண்பா்களுடன் திருக்குளத்தில் இறங்கி குளித்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் விக்னேஷை மீட்டு, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.