நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வடகரைதாழனூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தணிகாசலம் மகன் சுஜித் (11). இவா் அதே கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வடகரைதாழனூா் பெரிய ஏரியில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக சுஜித் நீரில் மூழ்கி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...