சுத்தமல்லியில் பெண் தற்கொலை
பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் பெண் விஷமருந்தி தற்கொலை செய்தாா்.


பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் பெண் விஷமருந்தி தற்கொலை செய்தாா்.
சுத்தமல்லி மேல தெருவை சோ்ந்தவா் குருசாமி ( 29). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மகாலட்சுமி ( 23). இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. குடும்பத் தகராறு காரணமாக மகாலட்சுமி விஷமருந்தினாராம். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். மகாலட்சுமிக்கு திருமணமாகி ஐந்து வருடங்களே ஆவதால், இது குறித்து திருநெல்வேலி சாா்ஆட்சியரும் இவ்வழக்கு குறித்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...