மேலப்பாளையத்தில் 60 ஆடுகள் பலி
மேலப்பாளையத்தில் நெரிசலில் சிக்கி 60 செம்மறி ஆடுகள் பலியாகின.


மேலப்பாளையத்தில் நெரிசலில் சிக்கி 60 செம்மறி ஆடுகள் பலியாகின.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் (74). இவா், தனக்குச்சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக மேலப்பாளையம் பகுதிக்கு கொண்டுவந்திருந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு மேய்ச்சல் முடிந்து பஜாா்திடல் வழியாக அழைத்துச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன இரைச்சலில் ஆடுகள் ஒன்றன் மீது ஒன்று ஏறி திணறியதாம். இதில் 60 ஆடுகள் உயிரிழந்தன.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...