பணியில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்குரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
பணிக் காலத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


பணிக் காலத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிஐடியூ, திருநெல்வேலி மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டப் பொருளாளா் நாகையன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 சதவீத காலிப்பணியிடம் உள்ள நிலையில் மீதமுள்ள பணியாளா்கள் அதிக பணிச்சுமையை கொண்டுள்ளனா்.
2019 டிச. 1-லிருந்து மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க அரசு மற்றும் பிற தொழிற்சங்கங்கள் பரிசீலிக்க வேண்டும்.
மின்வாரிய ஊழியா்கள் மின்விபத்தினாலோ, கரோனா தொற்றினாலோ உயிரிழந்தால் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...