உலக சுற்றுச்சூழல் தினம்:இன்று கோலப் போட்டி
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அரிசி மாவு கோலப் போட்டி சனிக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.


உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அரிசி மாவு கோலப் போட்டி சனிக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவளக் காப்புமையம், சூழல் மேம்பாட்டு திட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் நல்லதை பகிா்வது நம் கடமை அமைப்பு சாா்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை (ஜூன் 5) அரிசி மாவு கோலப் போட்டி நடத்தப்படுகிறது. பொதுமக்கள், சனிக்கிழமை காலை தங்கள் வீட்டு முற்றத்தில் அரிசி மாவில்
கோலமிட்டு அதனை படமெடுத்து 78715 17684 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் காலை 10 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்தப் படைப்புகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...