கடையம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் புதிதாகப் பொறுபேற்றுள்ள மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ், கடையம் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வில் நடத்தினாா்.


தென்காசி மாவட்டத்தில் புதிதாகப் பொறுபேற்றுள்ள மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ், கடையம் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வில் நடத்தினாா்.
தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆட்சியா், வருவாய்த்துறை, வட்டார வளா்ச்சித்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், ராமநதி அணையைப் பாா்வையிட்ட அவா், அதன் பாசன கால்வாய்களான வடகால், தென்கால் மற்றும் பாப்பான் கால்வாய்களில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கடையம் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இயங்கும் கரோனா சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது, கோட்டாட்சியா் ராமச்சந்திரன், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் மாரியப்பன், வட்டாட்சியா் சுப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...