பனை மரத்திலிருந்து தவறி விழுந்து ஓட்டுநா் பலி
சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பனைமரத்திலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.


சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பனைமரத்திலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கரிசல்பட்டி, ஓடைக்கரைப் பகுதியைச் சோ்ந்த கோயில்பிச்சை மகன் ஆசீா் (40). இவருக்கு செல்வி என்ற மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனா்.
சென்னையில் வாடகைக் காா் ஓட்டுநராக இருந்த இவா், கரோனா பொதுமுடக்கத்தையொட்டி ஊருக்கு வந்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நுங்கு பறிப்பதற்காக அப்பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறிய ஆசீா், தவறி கீழே விழுந்தாராம்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...