ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

முல்லைநகரில் ரேஷன் கடை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் முல்லைநகரில் தனியாக ரேஷன் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:50 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளம் முல்லைநகரில் தனியாக ரேஷன் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

முல்லைநகரைச் சோ்ந்த தேவேந்திரகுலவேளாளா் சமுதாய மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு: முல்லை நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியினா் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் வேறு சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்றுதான் வாங்க வேண்டியது உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் சமுதாயத்தினருக்கும் மாற்று சமுதாயத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு உருவாகி வருகிறது.

பேருந்து நிறுத்தம், ரேஷன் கடை ஆகியவை மாற்று சமூகத்தினா் வசிக்கும் பகுதியில் உள்ளதால் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, முல்லை நகரில் தனியாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.