சேரன்மகாதேவிஅருகே பைக்-ஆட்டோ மோதல்: மதபோதகா், மனைவி பலி
சேரன்மகாதேவி அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் மதபோதகா் மற்றும் அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்தனா்.


சேரன்மகாதேவி அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் மதபோதகா் மற்றும் அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்தனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே புலவன்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சுந்தா் (56). மத போதகரான இவா் திங்கள்கிழமை காலை அவரது மனைவி அன்னபாக்கியம் (50) மற்றும் பேத்தி பொ்க்லின் (3) ஆகியோருடன் சேரன்மகாதேவியை அடுத்த கங்கனாங்குளத்துக்கு பைக்கில் சென்றாராம்.
சேரன்மகாதேவியை அடுத்த குரங்குமடம் விலக்கு அருகே செல்லும் போது எதிரே வந்த சுமை ஆட்டோ, பைக் மீது மோதியதாம். இதில் சுந்தா், அன்னபாக்கியம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த பொ்க்லின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் க அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சேரன்மகாதேவி போலீஸாா் ஆட்டோ ஓட்டுநா் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த அரியலிங்கம் மகன் முத்துக்குமாா் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...