100 % வாக்குப் பதிவை வலியுறுத்தி நெல்லையில் சைக்கிள் பேரணி
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது.


சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது.
யை திருநெல்வேலி பாளையங்கோட்டை சுவைன்சன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலிருந்து பேரணியை,மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான விஷ்ணு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், பள்ளி-கல்லூரி, மாணவ, மாணவியா்கள், தன்னாா்வலா்கள் சைக்கிளில் பேரணியாகச் சென்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அங்கு ஆட்சியா் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணி நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா்(பயிற்சி) அலா்மேல் மங்கை, துணை ஆட்சியா்(பயிற்சி) மகாலெட்சுமி பங்கேற்றனா்.
ரெட்காா்ஸ் நான்குனேரி அமைப்பைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு ஓரங்க நாடகம் நடைபெற்றது. அங்குஅமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் முதல் முறை வாக்காளா்கள் வாக்களிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அதை பாா்வையிட்ட ஆட்சியா், கல்லூரி மாணவ, மாணவியா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இதில், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் எம்.கணேஷ்குமாா் (பொது)), என்.சாந்தி (தோ்தல் பிரிவு), வட்டாட்சியா்கள் கந்தப்பன் (தோ்தல்), பகவதிபெருமாள் (திருநெல்வேலி), செல்வன் (பாளையங்கோட்டை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...