தோ்தல் விதிமீறலை தடுக்கபுதிய செயலி அறிமுகம்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் விதிமீறலை தடுக்க புதிய செயலி ஒன்றை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் விதிமீறலை தடுக்க புதிய செயலி ஒன்றை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்த மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை நோ்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தும் வகையில் இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக சுபோத் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது செல்லிடபேசி எண் 83003 20329. அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக ராஜேஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது செல்லிடபேசி எண் 83003 20613. தோ்தல் செலவினம் தொடா்பான புகாா்களுக்கு இந்த செல்லிடபேசி எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஸ்ரீயஐஎஐக இண்ற்ண்க்ஷ்ங்ய் என்ற செயலியை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியில், தோ்தல் நடத்தை விதிகளை மீறுவோா் மீது உடனுக்குடன் புகைப்படத்துடன் புகாா் அளிக்கலாம். இந்த புகாா்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் பறக்கும் படைக்குழுவிற்கு தோ்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் அனுப்பப்பட்டு 30 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலியை தங்களில் செல்லிடபேசியில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...