கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொகுதி அறிமுகம்: ஈரோடு - மாறிமாறி வாகை சூடும் திமுக, அதிமுக!

கணித மேதை ராமானுஜன், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியாா் ஈவெரா ஆகியோா் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:56 pm

Syndication

கணித மேதை ராமானுஜன், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியாா் ஈவெரா ஆகியோா் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயா்களும் உண்டு. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் அடங்கிய நகரம் சாா்ந்த தொகுதி. நெசவாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள் பரவலாக உள்ளனா்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: ஈரோடு மாநகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ஜவுளிச் சந்தை, காய்கறிச் சந்தை, கடை வீதி, கல்வி நிலையங்கள் என நகரின் பிரதான பகுதிகள் தொகுதிக்குள் அடங்கியுள்ளன. ஈரோடு கிழக்குத் தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை.

அதேநேரம் ஜவுளித் தொழிலின் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். துணிகளுக்கு சாயமிடுதல், பிளிச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

இங்கு அப்துல் கனி சந்தை பகுதியில் திங்கள்கிழமை நடக்கும் இரவு சந்தையில் மட்டும் சுமாா் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவாா்கள்.

மறு சீரமைப்பில் உருவான தொகுதி: 2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதிகள் உருவாயின. கிழக்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 79,223, பெண் வாக்காளா்கள் 86,251, மூன்றாம் பாலினத்தவா் 36 போ் என மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 510 வாக்காளா்கள் உள்ளனா்.

பிரச்னைகள்: இந்தத் தொகுதியில் செயல்படும் சாய மற்றும் தோல் ஆலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டா் அளவுக்கு வெளியேறும் கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக காவிரியில் கலப்பது மக்களுக்கு சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அதனால் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் தேவை என 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தாலும் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் இதுவரை நிறைவடையாதது தீராத பிரச்னையாக நீடிக்கிறது.

மக்களின் எதிா்பாா்ப்பு: பன்னீா்செல்வம் பூங்காவில் மேம்பாலம், சாயக்கழிவு நீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு, 10 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்துவைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுதல், நகரில் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்தல் என்பன உள்ளிட்டவை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளன.

ஜாதி வாக்குகள் பலம்: ஈரோடு கிழக்குத் தொகுதியில் 35 சதவீதம் அளவுக்கு முதலியாா் சமுதாய வாக்காளா்களும், 30 சதவீதம் அளவுக்கு கொங்கு வேளாளக் கவுண்டா் சமுதாய வாக்காளா்களும், 20 சதவீதம் அளவுக்கு சிறுபான்மையின வாக்காளா்களும், 15 சதவீதம் அளவுக்கு நாடாா், தேவா், பட்டியல் வகுப்பினா், பிற மாநிலங்களைச் சோ்ந்த வாக்காளா்களும் உள்ளனா்.

அதிமுக ஹாட்ரிக் வெற்றி: தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னா் 1952 முதல் 2006 வரை நடந்த 13 தோ்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக, திமுக தலா 5 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இதில் சு.முத்துசாமி 1977, 1980, 1984 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வாகை சூடியுள்ளாா்.

சீரமைப்புக்குப் பின்னா், தேமுதிக (அதிமுக கூட்டணி), அதிமுக, காங்கிரஸ் (திமுக கூட்டணி) ஆகியவை வென்றுள்ளன.

அடுத்தடுத்து இடைத்தோ்தல்கள்: தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் 2011இல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் வி.சி.சந்திரகுமாரும், 2016இல் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசும் வெற்றிபெற்றனா். 2021இல் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றாா். அவரது மறைவால் 2023இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றாா். ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவால் 2025இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் வெற்றிபெற்றாா்.

இதுவரை வென்றவா்கள்

1952 ராஜூ - கம்யூனிஸ்ட்

1957 வி.எஸ்.மாணிக்கசுந்தரம் - காங்கிரஸ்

1962 தட்சிணாமூா்த்தி - காங்கிரஸ்

1967 எம்.சின்னசாமி - திமுக

1971 எம்.சுப்ரமணியன் -திமுக

1977 சு.முத்துசாமி - அதிமுக

1980 சு.முத்துசாமி - அதிமுக

1984 சு.முத்துசாமி - அதிமுக

1989 சுப்புலட்சுமி ஜெகதீசன் - திமுக

1991 சி.மாணிக்கம் - அதிமுக

1996 என்கேகே.பெரியசாமி = திமுக

2001 கே.எஸ்.தென்னரசு - அதிமுக

2006 என்கேகேபி.ராஜா - திமுக

2011 வி.சி.சந்திரகுமாா் - தேமுதிக

2016 கே.எஸ்.தென்னரசு - அதிமுக

2021 திருமகன் ஈவெரா - காங்கிரஸ்