சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மனைவி கொலை: கணவா் கைது

மயிலாடுதுறையில் மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :21 மார்ச் 2026, 9:52 pm

மயிலாடுதுறையில் மதுபோதையில் மனைவியை அடித்து கொன்ற நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் தாலுகா துகிலி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் (45), மயிலாடுதுறை ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் மதுபானக்கடை முன்பு குடித்துவிட்டு தனது மனைவி பாக்கியத்துடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளாா்.

அப்போது சாலையில் விழுந்த பாக்கியம் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தாா். அவா் அருகிலேயே அழகப்பனும் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளாா். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நெற்றியில் ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்த பாக்கியத்தையும், மதுபோதையில் கிடந்த அழகப்பனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் பாக்கியம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து, வருவாய் ஆய்வாளா் பிச்சைபிள்ளை அளித்த புகாரின் பேரில் அழகப்பனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

குடும்ப சண்டையின் காரணமாக மது போதையில் அழகப்பன் தனது மனைவி பாக்கியத்தை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அழகப்பன்மீது கொலை வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.