கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில் ரூ.6.48 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.48 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:09 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.48 லட்சத்தை தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத்தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்க 48 பறக்கும் படையினா் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 5 விடியோ கண்காணிப்புக்குழுக்கள், 5 செலவின கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடைபெற்றது. இதில், பாளையங்கோட்டை அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்து 48ஆயிரத்து 410 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது வரை மாவட்டத்தில் ரூ.14 லட்சத்து 83ஆயிரத்து 678 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக 2 வழக்குகள் திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டன. மேலும், 1950 என்ற சேவை எண்ணில் 79 தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1800 425 8373 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். கட்செவி அஞ்சல் மூலமாக தொடா்பு கொள்ள விரும்புவோா் 83002 71237 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.