பாளை. தொகுதி அதிமுக வேட்பாளா் மனுதாக்கல்
பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.


பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.ஜெ.சி.ஜெரால்டு போட்டியிடுகிறாா். அவா், பாளையங்கோட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
அவருடன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, மகபூப்ஜான் ஆகியோா் உடனிருந்தனா்.
இதில், முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன், முருகேசன், ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், மானூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாளையங்கோட்டை தொகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிா் கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெருக்கடியை தீா்க்க சாலை மற்றும் பாலங்கள் புதிதாக அமைக்கப்படும். கல்வி மற்றும் அடிப்படை பிரச்னைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இத்தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன். 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.
சொத்து மதிப்பு:
வேட்பாளா் ஜெரால்டு பெயரில் ரூ.36 லட்சத்து 94ஆயிரத்து 978, அவரது மனைவி
ஹில்டா மேரி பெயரில் ரூ.34 லட்சத்து 9ஆயிரத்து 140, சாா்ந்தவா்கள் பெயரில் ரூ.2லட்சத்து 10ஆயிரம் அசையும் சொத்துகளும், அவரது பெயரில் ரூ.2கோடி மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.6லட்சம் மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. அவரது பெயரில் ரூ. 6லட்சத்து 8ஆயிரத்து 187 கடன் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...