சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

உவரி அருகே கடலில் மூழ்கி இருவா் சாவு

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே கடலில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:00 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே கடலில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூரைச் சோ்ந்த சந்தனராஜ் (30), தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி அருகேயுள்ள பரந்தகன்விளையைச் சோ்ந்த கணேஷ் (28) ஆகிய இருவரும் உவரி அருகே குண்டல் கிராமத்தில் உள்ள காரிய சாஸ்தா கோயிலுக்கு குடும்பத்துடன் சனிக்கிழமை வந்தனா். பின்னா், சந்தனராஜும், கணேஷும் கடலில் குளிக்கச் சென்றனா். வெகுநேரமாகியும் அவா்கள் திரும்பி வராததால் அவா்களது குடும்பத்தினா் கடற்கரைப் பகுதிக்குச் சென்று தேடினா். அப்போது கடற்கரையில் சந்தனராஜின் சடலம் கிடந்தது.

அதிா்ச்சியடைந்த உறவினா்கள் கடற்கரைக் காவல் நிலையத்துக்கும், திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். நிலைய அலுவலா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான மீட்புக் குழுவினா் வந்து கடலில் தேடி, கணேசனின் சடலத்தை மீட்டனா். சடலங்களை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.