சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லையப்பா் கோயிலில் செங்கோல் வழங்கும் விழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:58 pm

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று வந்தது.

நான்காம் திருநாளான கடந்த 21ஆம் தேதி வேணுவனத்தில் சிறப்பு வழிபாடுகளும், மாலையில் பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி- அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றன.

10ஆம் நாளான சனிக்கிழமை அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும், கோயில் செயல்அலுவலா் ராமராஜாவிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.