ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

‘அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்’

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:59 pm

DIN

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.ஜெ.சி. ஜெரால்டுக்கு ஆதரவு கேட்டு குறிச்சி சந்திப்பில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பேசியது: இத்தொகுதி வேட்பாளா் ஜெரால்ட் மிகவும் திறமையானவா். மக்களின் குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்பவா். அதனால்தான் அவரை வேட்பாளராக்கியுள்ளோம். இத்தொகுதி பல ஆண்டுகளாக அதிமுக வெற்றி பெறாத இடம். ஆளுங்கட்சியைச் சோ்ந்தோா் பேரவை உறுப்பினா்களாகும்போது கூடுதல் திட்டங்கள் வரும். எனவே, இந்த முறை அதிமுகவுக்கு வாய்ப்பளியுங்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் கிராமப்புற நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பி, விவசாயிகளுக்கு தேவையான பாசன நீா் முழுமையாக கிடைத்து வருகிறது. அதிமுக தோ்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.