சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு 30இல் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு வருகிற 30ஆம் தேதி தொடங்கவுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:20 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு வருகிற 30ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்குப் பதிவு செய்யலாம் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தோ்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து, மண்டல அலுவலா்கள் அல்லது உதவி மண்டல அலுவலா்கள் அல்லது நுண் பாா்வையாளா்கள் அடங்கிய குழுக்கள் மூலம் மண்டல அலுவலா் நிலையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவா்கள் வருகிற 30, 31 மற்றும் ஏப். 1 ஆகிய தேதிகளில் தபால் வாக்குச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட வாக்காளா்களின் இருப்பிடத்திற்கு சென்று, வாக்குகளை பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகளை மூடிய உறையில் பெற்றுக்கொள்வா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.