அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவன் இவன் பட வழக்கில் திரைப்பட நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.


நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவன் இவன் பட வழக்கில் திரைப்பட நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த திரைப்படம் அவன் இவன். இதில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்து வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி முருகதாஸ் மகன் சங்கராத்மஜன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 20 வழக்கில் நேரில் ஆஜராக ஆர்யா வரவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார்.
இந்நிலையில் இன்று காலை ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் முன்பு ஆஜரானார். தனக்குப் பிறப்பித்த பிடிவாரண்டை தளர்த்த கோரி நேரில் ஆஜரான நிலையில் வழக்கு பகல் ஒரு மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...