பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா விதிமீறல்:சேரன்மகாதேவியில் உணவகங்களுக்கு சீல்

சேரன்மகாதேவியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகங்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனா்.

News image
Updated On :7 மே 2021, 8:32 pm

DIN

சேரன்மகாதேவியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகங்களுக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வியாழக்கிழமை முதல் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சேரன்மகாதேவி பேரூராட்சிப் பகுதியில் செயல் அலுவலா் காதா் தலைமையில் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகம் உள்பட பல்வேறு உணவகங்களில் விதிகள் கடைப்பிடிக்காதது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த உணவகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத உணவகங்கள், கடைகள் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.