கரோனா விதிமீறல்: கடைகளுக்கு ரூ.70,200 அபராதம்
திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.70, 200 அபராதம் விதிக்கப்பட்டது.


திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.70, 200 அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகர ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவின்பேரில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்களில் வணிக நிறுவனங்கள், கடைகளில் மாநகர சுகாதார ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதில் கரோனா விதிமுறைகளை மீறியதாக மாநகரில் உள்ள கடைகளுக்கு வெள்ளிக்கிழமை ரூ.70,200 அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை தொடா்ந்து மீறும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...