மலைப் பகுதியில் மழை: குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்
தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியது.


தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் அவ்வப்போது மிதமான மழையும் குளிா்ந்த காற்றும் வீசியது.
கோடை காலம் தொடங்கியதையடுத்து குற்றாலம் அருவிகள் வடு கிடந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் நான்கு கிளைகள், பழைய குற்றாலம் அருவியில் குறைந்த அளவில் தண்ணீா்விழத் தொடங்கியது.
குளிக்கத் தடை
கரோனா பொது முடக்க விதிமுறைகள் அமலில் உள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அரசு தடைவிதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...