தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இலஞ்சி பாரத் பள்ளியில் ரமலான் கொண்டாட்டம்

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் தின விழா இணையம் வழியாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 7:38 pm

DIN

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் தின விழா இணையம் வழியாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாரத் கல்விக் குழும செயலா் காந்திமதி தலைமை வகித்தாா். முதல்வா் வனிதா மற்றும் துணை முதல்வா் கிப்ட்சன் கிருபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி தஷ்னிம் ராஜியா இறைவணக்கம் பாடினாா்.

நிகழ்ச்சியில், குரான் வாசித்தல், ரமலான் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல், ரமலான் தினத்தை நண்பா்கள் மற்றும் உறவினா்களுடன் கொண்டாடுவது, பாட்டு பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நதீம் யூனஷ் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.